தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ,அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் ஆகிய இணைந்து நடத்திய 32வது பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா
வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அறிவியலதமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்து அனைவரையும் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் தமிழ் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் பாரத ஜோதி அனுமதியுடன் நடைபெற்றது. பதிவாளர் பன்னீர்செல்வம்,
வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார் .
சிறப்பு விருந்தினராக சென்னை,தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சிறப்பு நிலைப் பேராசிரியர் மருத்துவர் நரேந்திரன் நூல் வெளியிட்டு பேசியதாவது தஞ்சையில் அனைத்திந்திய அறிவியல் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிகள்,மருத்துவ தமிழ் நூலாக்கப்பட்ட பணிகள் மற்றும் கலைச் சொற்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
. தொடர்ந்து தமிழ்ப் பல்கலைகழகம், இலக்கியத்துறை முன்னாள் பேராசிரியர் கு.வெ.பாலசுப்ரமணியன் நூலை பெற்றார் ,பின்னர் அவர் கூறியதாவது தமிழ் பல்கலைகழகத்தில் முதல் துணைவேந்தர் சுப்பிரமணியன் அவர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், இலக்கியக் கலைச் சொற்கள் குறித்து விளக்கமாக பேசினார். . நிறைவில் அறிவியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,முனைவர் பட்ட ஆய்வாளர் பிரவீன் குமார் நன்றி கூறினார். இதில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெற்றனர்