தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை ஜீலை 20 சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு உடற்கல்வி துறை சார்பில் சதுரங்க போட்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.எல்.ஜவஹர்லால் தலைமையில் சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜெ.ஜெ.கலைவாணி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் தேனி கிராண்ட் செஸ் அகடாமி நிறுவனத்தின் மாஸ்டர் செஸ் மாஸ்டர் எஸ்‌ .சையது மைதீன் பங்கேற்று போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி சான்றிதழ் கேடயம் வழங்கினார் இந்த
போட்டியில் கலந்து கொண்ட 60 மாண்வ மாண்விகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பி.ராஜதுரை செய்திருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *