மாவட்டம் 3242 F பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாத விழா ஆவூர்யூ ஆர் ஏசி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.மாவட்ட தலைவர் லயன் பரமகுரு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் தேர்வு சீனிவாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் லயன் மதன்கோபால் ,முன்னாள் ஆளுநர்களை பாராட்டுகளை தெரிவித்து கௌரவித்தார்.
தொடர்ந்து உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் சவுரி ராஜ், மாவட்ட முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் டாக்டர் ஸ்டாலின்,ஆளுநர் தேர்வு மோகன்ராஜ், மாவட்டம் 3241J முதல் துணைஆளுநர் சிவசுப்பிரமணியன், மாவட்டம் 3241J இரண்டாம் துணை ஆளுநர் தேர்வு தில்லைவாணன்,ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். நிறைவில் மாவட்ட இணை செயலாளர் லயன் ரத்தினகுமார் நன்றி கூறினார்.விழாவில் செயலாண்மை குழு தலைவர் லயன் ரமேஷ்,செயலாளர் லயன் ஹசன் பஷீர்,பொருளாளர் லயன் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள்,மாவட்ட அமைச்சரைவை பொறுப்பாளர்கள்,மாவட்டத் தலைவர்கள் மண்டல தலைவர்கள் வட்டாரத் தலைவர்கள் அனைத்து சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கலந்து கொண்டனர்