தேனி அருகே வீரபாண்டியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின் பேரில் இந்த நிகழ்ச்சிக்கு வீரபாண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கீதா சசி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் முன்பு மக்கள் அதிகம் கூடும் மும்முனை சந்திப்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் சசி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஒன்றிய பேரூர் மற்றும் ஊரகத் திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்