திருவொற்றியூர்
வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி பிரசித்தி பெற்ற கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த பிப். கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவர் சந்திரசேகரர் சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.


இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். காலை தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப்பட்டது.


கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க காலை 10.20 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலா கலமாக நடைபெற்றது.


திருக்கல்யாணத்தில்கலந்துகொண்ட பக்தர்களுக்கு திருவொற்றியூர். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன் மற்றும் லட்சம் தண்ணீர் பாட்டில் மற்றும் அன்னதானம் வழங்கினார். வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, பா. ஜ. க. மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.


திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதையொட்டி மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் பால், பழம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


விழாக்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் முல்லை, துணை கமிஷனர் ஹரிகரன், உதவி கமிஷனர் நற்ச்சோனை மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
முடிவில் மகா தீபாராதனையும், மாலை 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும்
நடைபெற்றது. இரவு கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *