தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ அறிவுறுத்தலின்படிஇந்த விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவரும் தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமானவி.பி. வேல்முருகன் தலைமை வகித்து பேரூராட்சியின் முக்கிய அங்கமான பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கம்பம் ஒன்றிய திமுக அவைத் தலைவர் தாமோதரன் பேரூர் திமுக அவைத் தலைவர் பிச்சை மணி மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்