பெருகவாழ்ந்தான்., மார்ச்.02
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பெருகவாழ்ந்தானில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அறிஞர் அண்ணா சிலையில் இருந்து பேரணையாக சென்று பேருந்து நிலையம் முன்பு 73 கிலோ கேக் வெட்டி சுமார் 1000 குடும்பங்களுக்கு நல திட்ட உதவி வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கழக மூத்த நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ் , அவைத்தலைவர் ஜெ.நாகையன் ,துணைச் செயலாளர் வேல்முருகன் மற்றும் மகேந்திரன் ,சாந்தி இனிய சேகரன் ,விவசாய அணி சாக்கோ.சண்முகா வேல் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர் தேவதாஸ் முன்னணியில் ஒபி.எஸ் அணியை சேர்ந்த 50 குடும்பங்கள் திமுகவில் இணைந்தனர்.