தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள மார்க்கையன் கோட்டை
பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின் பேரில் இந்த நிகழ்ச்சிக்கு மார்க்கையன்கோட்டை திமுக பேரூர் செயலாளரும் மார்க்கையன் கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவருமான ஒ.ஏ. முருகன் பேரூரில் மக்கள் அதிகம் கூடும் குச்சனூர் அம்மாபட்டி போடிநாயக்கனூர் ஆகிய ஊருக்கு செல்லும் மும்முனை சாலை சந்திப்பில் பொதுமக்களுக்கும் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சியின் முக்கிய அங்கமான பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி வார்டு செயலாளர்கள் ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்