மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் சென்று கொண்டிருந்த வாகனத்தின் முன்பு சென்ற பைக் ஓட்டி சென்ற திருச்சி கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் கீழக்கல்கண்டார்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் மாணவர் விக்னேஷ் (20) மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் முன்னால் சென்ற கார் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் விக்னேசிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து வந்த அருணுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உடன் அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தலையில் பலத்த காயடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.