நெல் சேமிப்பு தளம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டிடங்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இணைந்து அடிக்கல் நாட்டினர்

நன்னிலம்., மார்ச்.04

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட வண்டாம்பாலை பகுதியில் ரூபாய் 9. 57 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலைய கட்டிடத்திற்கு காணொளி காட்சி வாயிலாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து வண்டாம்பாளையம் சிப்காட் அருகே தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் இணைந்து செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கமுகக்குடி கிராமத்தில் 9000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன், ரூபாய் 11.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன நெல் சேமிப்பு தளங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *