தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ்,
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், விளையாட்டு வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சிக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தலைமை வகித்தார் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் நகராட்சி ஆணையாளர் சே.தமீஹா சுல்தானா ஆகியோர் முன்னிலை வகித்தனர் பெரியகுளம் நகராட்சி பகுதி விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்வில் பெரியகுளம் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ்,நகர் மன்ற கவுன்சிலர்கள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.