தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
12.82 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் மற்றும் குண்டடம் பகுதிகளில் உப்பாறு ஆற்றின் குறுக்கே தடுப்பனை அமைக்கும் பணி மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கி வைப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் நஞ்சியாம்பாளையத்தில் 7.53 கோடி மதிப்பீட்டில் நீர்வளத் துறையின் சார்பில் குப்பாறு அணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி, தாராபுரம் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் 5.29 கோடி மதிப்பீட்டில் நபார்டு, ஊராட்சி பொது நிதி, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கி வைக்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான இல .பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும் திமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ் வி செந்தில் குமார் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் சன் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உப்பாறு அணையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கும் தாராபுரம் மற்றும் குண்டடம் ஆகிய பகுதிகளில் சாலை பணிகளை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினர்.
நஞ்சியம்பாளையம் அருகேஆ நீர்வளத்துறையின் சார்பில் கீழ் ரூ.7.63 கோடி மதிப்பீட்டில் உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
வரப்பாளையம் மற்றும் நஞ்சியம் பாளையம் கிராமப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்பட வேண்டும் என்பதாகும்.
தடுப்பணையின் கொள்ளளவு 1178 மில்லியன் கன அடியாகும். வருடத்திற்கு மூன்று நிரப்புதல்கள் மூலம் 3.534 மில்லியன் கன அடி நீர் சேமித்து பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணையின் உயரம் 180 மீட்டரும். தடுப்பணையின் நீளம் 95 மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பணை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 43 திறந்த வெளி கிணறுகளுக்கும் 2 ஆழ்துளை கிணறுகளுக்கும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இத்திட்டத்தின் மூலம் 144971 ஏக்கர் பரப்பளவு கூடுதலாக பயன்பெறும். இத்திட்டத்தின் மூலம் கூடுதல் உணவு உற்பத்தி சராசரியை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் புறம்போக்கு நிலத்தில் முன்மொழியப்பட்டது.
தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.157 கோடி மதிப்பீட்டில் சகுனிபாளையம் தொப்பம்பட்டி ஊராட்சி எல்லை வரையிலும், ஊராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் தெக்காலூர் அம்மன் கோவில் சாலை வரை தார்சாலை அமைக்கும் பணி, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.43.00 இலட்சம் மதிப்பீட்டில் தாராபுரம் பூளவாடி சாலை முதல் புளியந்தோப்பு வரை தார் சாலை அமைக்கும் பணி,
ரூ.73.71 இலட்சம் மதிப்பீட்டில் குண்டடம் ஊராட்சி ஜோத்தியம்பட்டி, சூரிய நல்லூர் ஊராட்சிகளில் ஜோதியம்பட்டி முதல் பழையநவக்கொம்பு வரையிலும், ரூ.102 கோடி மதிப்பீட்டில் மோளரபட்டி ஊராட்சியில் தாராபுரம் பூளவாடி சாலை முதல் மோளரப்பட்டி சாலை வரையிலும், ரூ.53.46 இலட்சம் மதிப்பீட்டில் சிறுகிணறு ஊராட்சியில் தாராபுரம் வெள்ளக்கோவில் பிரிவு முதல் குள்ளக்கவுண்டன்புதூர் சாலை வரை சாலை மேம்படுத்துதல் பணி என மொத்தம் ரூ.12.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கி வைத்தனர்.