செங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் அலுவலர் சீனிவாசன் தலைமையில் செங்குன்றம் அடுத்த ஆட்டம்தாங்கள் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தீ விபத்து பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய வகுப்புகளும், தொடர்ந்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.