தேனியில் உங்கள் கனவு சொல்லுங்க தேனி எம்பி தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்யப்படும் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கலந்துகொண்டு தேனி மாவட்டத்தில் என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030 செயல் திட்டங்கள் குறித்த கையேடு மற்றும் தமிழ்நாடு அரசின் அனைவருக்குமான ஆட்சி 5 ஆண்டே சாட்சி தமிழக அரசின் சாதனை மலரினை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்கள்