ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை புனரமைத்து வழங்கியது. இதன் மூலம், நிலைத்த நீர் மேலாண்மை மற்றும், காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் உள்ள தனது நீண்டகால அக்கறையை ஹூண்டாய் வெளிப்படுத்தியுள்ளது.
ஹூண்டாயின் H2OPE திட்டத்தின் கீழ் ₹1.73 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டம், குளத்தின் சேமிப்பு திறனை 21,840 கன மீட்டராக உயர்த்தி, இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் மீள்நிரப்பு திறனை கணிசமாக வலுப்படுத்தி, மக்களுக்கான நீர் ஆதாரத்தை மேம்படுத்தப்பட்டது.
புனரமைப்புப் பணிகளில் வண்டல் நீக்கம், கரைகளை பலப்படுத்துதல், மண் அரிப்பைத் தடுக்க கற்கள் மற்றும் சுவர், பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டுதல், LED விளக்குகளை நிறுவுதல் மற்றும் வசதியான நடைபாதை உருவாக்குதல் ஆகியவை அடங்கிய மறுசீரமைப்பைத் தாண்டி, இம்முயற்சி நீர்நிலையின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மதிப்பை புதுப்பிக்கப்பட்டது.
மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி வீடு மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான மேம்பட்ட நீர் ஆதாரம் நீர் தட்டுப்பாடு காலங்களில் மேம்படுத்தப்பட்ட காலநிலை மீள்தன்மை மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் அணுகக்கூடிய இடங்கள் 1,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் புறநமைக்கப்பட்டது.
இக்குளம், இப்பகுதியில் நீண்டகால நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும் வகையில் இந்த குளத்தை தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஹூண்டாய் தொழிற்சாலை மூத்த நிர்வாகி கோபால கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா, உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்