ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி சார்பாக, மாணவர்களின் தொழில்முறை திறன்களையும் நடைமுறை அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி (Exposure Training Program) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிற்சியின் போது மாணவர்கள் விமான நிலையத்தின் செயல்பாடுகள், விமானப் பாதுகாப்பு நடைமுறைகள், பயணிகள் சேவை முறை, விமான இயக்கம் தொடர்பான அடிப்படை செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நேரடியாக கற்றறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். மேலும் விமானத்துறையில் பணியாற்ற தேவையான ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் தொழில்முறை நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த பயிற்சி நிகழ்வு மாணவர்களின் எதிர்கால விமானத்துறை தொழில் வாய்ப்புகளுக்கு முக்கியமான அனுபவமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *