புதுச்சேரி வில்லியனூர் அரசு மருத்துவமனையில்

மத்திய அரசின் சுகாதாரத்துறை 14 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இலவச ஹெச்பிவி தடுப்பூசி போட உத்தரவிட்டத்தின் அடிப்படையில் புதுச்சேரியில் 14 வயதுடைய பெண்களுக்கு இலவச ஹெச்பிவி தடுப்பூசி ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வில்லியனூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இலவச ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் முகாமை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்து, தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், டாக்டர் பாமகள் கவிதை, டாக்டர் ரவிவர்மன், மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன். தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், தொமுச தலைவர் அங்காளன், விவசாய அணி துணை அமைப்பாளர் காசிநாதன், தொகுதி துணை செயலாளர் ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சபரிநாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், ரகு, சூர்யா, ஷர்மா, சிலம்பு, மணிகண்டன், கிளைக் கழக நிர்வாகிகள் ராஜி, மிலிட்டரி முருகன், ரகுமான், திலகர், கார்த்திகேயன், பாலா, அன்பு, குட்டி, கார்த்தி, மோனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *