கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் மாதாந்திர மஆலோசனை கூட்டதில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகவர் நலன் கருதி இலவச கண் பரிசோதனை முகாம் ஹோட்டல் டைமண்ட் மினி மஹால் நடைபெற்றது .
முகாமை கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் பொது மேலாளர் அபு தலைமை வகித்து துவக்கி வைத்து கேலக்ஸி இன்ஷூரன்ஸ்100% கிளைம் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார் . திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்து கேலக்ஸியின் முகவர் நலன்களை எடுத்துறைத்தார்.சிறப்பு விருந்தினராக கும்பகோணம் மேக்சி விஷன் கண் மருத்துவமனை மருத்துவர் பிரியங்கா கண்கள் பராமரிப்பு பற்றி விரிவாக எடுத்துறைத்தார் .
மேக்சி விஷன் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று முகவர்களின் .கண்களை பரிசோதித்தனா். முகவர்கள் 50 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு இலவச ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட முகவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.நிறைவில் கும்பகோணம் டிவிசனல் மேனேஜர் .நவீன் நன்றி கூறினார்.