பழனி அருகே சின்ன கலயம்புத்தூர் கலிக்க நாயக்கன்பட்டி கோதைமங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும் பழனி நகராட்சியிலும் ஒன்றரை கோடி மதிப்பிலான முடிவுற்ற நலத்திட்ட பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்கள் மூலம் கட்டி முடிக்கப்பட்ட விவசாய குடோன் ஊராட்சி மன்ற அலுவலகம் அங்கன்வாடி மையம் புது சுகாதார வளாகம் நியாய விலைக் கடை உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்