தருமபுரி மாவட்டம் பாப்பிரப்பட்டி வட்டம் பொ,மல்லாபுரம் சமுதாயக்கூடத்தில் சர்வதேச மகளிர் தின விழா த்ரீ ஸ்டார் தொண்டு நிறுவனத்தில் உள்ள சுமார் 40 மகளிர் சுய உதவி குழுவினர்கள் முன்னிலையில் த்ரீ ஸ்டார் தொண்டு நிறுவனத்தின் தலைவர், எம்,விஷ்ணு தலைமையில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது
முன்னதாக சுய உதவி குழு மகளிருக்கு இசை நாற்காலி கோலப்போட்டி பேச்சுப்போட்டி கவிதை போட்டி பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி மோர் குடிக்கும் போட்டி சிறப்பாக நடைபெற்றது போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் சூர்யா ஏ,ஈ,ஓ கனரா பேங்க் பாப்பிரெட்டிப்பட்டி கிளை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் விழாவின் இறுதி கலந்து கொண்ட மகளிர் சுய உதவி குழுவிற்கு நினைவு பரிசு வழங்கி மதிய உணவு வழங்கப்பட்டது