கோவை துடியலூர் ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் துடியலூர் பள்ளிவாசல் HMSJ ஜமாத் சார்பில், துடியலூர் பள்ளிவாசல் வளாகத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரமலான் நோன்பு காலத்தில் பல்வேறு சமூக மக்களிடையே நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் சுல்தான் மைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் அமீர் அப்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மௌலவி கமால் முகமது அல்தாபி பிரார்த்தனை செய்தார்.

இதில் அருகில் கோவில் மற்றும் தேவாலய நிர்வாகிகள், பள்ளிவாசல் இமாம்கள், அண்டை வீட்டார், பொதுமக்கள், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள்,வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் அனைவரும் ஒன்றுகூடி நோன்பு திறந்து ஒற்றுமையுடன் சமூக நல்லிணக்கத்தை பேணுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அனைவருக்கும் நோன்பு கஞ்சி,பேரீச்சம்பழம்,பழங்கள்,பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டன நிகழ்ச்சியில் பள்ளிவாசல் துணைத் தலைவர் ஷேக் பாவா மகபூப், பொருளாளர் கனி, கமிட்டி உறுப்பினர்கள் சதாம் உசேன், புஜமில், அரஃபா இளைஞர் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *