கோவை மாவட்டம்
வால்பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வால்பாறை காவல் நிலையத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இந்த அறையிலிருந்து நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 52 கண்காணிப்பு கேமராக்களுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளான வாட்டர்பால்ஸ் எஸ்டேட்,மற்றும் கூழாங்கல் ஆறு ஆகிய இரண்டு பகுதிகளில் கண்காணிப்பு முகாம் அமைக்கப்பட்டு பணி முடிந்த நிலையில் அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேற்று திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா, நகராட்சி நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம்,வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்