வாயலூர் பாலாற்றில் கள்ளழகர் இறங்கினார் பக்தர்கள் ஆடிப் பாடி வழிபட்டனர்


செங்கல்பட்டு மே 2
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமம் வட திருமாலிருஞ்சோலை கிழக்கு கடற்கரைச்சாலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீ கள்ளழகர் பெருமான் சித்திரை பௌர்ணமியையொட்டி கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றில் குதிரை வாகனத்தில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று 1 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது

காலை 6 மணிக்கு முகையூர் கிராமம் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி கூவத்தூர் அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் ஆலயம் வேப்பஞ்சேரி காத்தான் கடை ஆகிய இடங்கள் வழியாக பவனி சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனையுடன் மக்கள் வழிபாடு செய்தனர்

வாயலூர் சத்திரம் கிராமம் பாலாற்றுக்கு வந்த போது பஜனை மற்றும் வானவேடிக்கைகளுடன் ஏராளமான பக்தர் ஆடிப் பாடி சாமியை வரவேற்றனர் இதையடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *