தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் – சத்யகலா தம்பதியின் மகன்சாய்நிஷாந்த் (17). இவர் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் சாய்நிஷாந்தின் அப்பா ராஜ் என்றஅந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்சாய்நிஷாந்திற்கு இன்று வேதியியல் தேர்வு. இன்னும் சற்று நேரத்தில் தேர்வு தொடங்க உள்ள நிலையில் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய்நிஷாந்த் தன் தந்தை வீட்டில் இறந்துகிடக்கும் நிலையில் இன்று காலை வேதியியல் தேர்வு எழுதுவதற்கு பட்டுக்கோட்டை அரசு மாதிரி
மேல்நிலைப்பள்ளிக்கு தற்போது வந்துள்ளார்.


சாய்நிஷாந்த் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு இறந்துகிடந்த தனது தந்தை ராஜின் காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்றார். பள்ளிக்கு வந்த மாணவி சாய்நிஷாந்தை பார்த்து அவரது சக நண்பர்களும் சாய்நிஷாந்தை
கட்டியணைத்து அழுதனர். இது குறித்து மாணவர்சாய்நிஷாந்த் கூறுகையில், நான் நன்றாக படித்து மிகப்பெரிய ஆளாக வரவேண்டும் என்று என் அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவருடைய விருப்பப்படியே நான் நன்றாக படித்து மிகப்பெரிய ஆளாக வருவேன். எனக்கு படிப்பு முக்கியம் என்பதால் நான் இன்று தேர்வு எழுத வந்துள்ளேன் என்று அழுதபடியே கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *