நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே ஆதிபடை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திர மாத திருவிழா நடைபெறுவதையொட்டி 30.04.2026 அன்று திருத்தேர் முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்ததை முன்னிட்டு 01.05.2026 மற்றும் 02.05.2026 ஆகிய மூன்று தினங்களில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் 15வது ஆண்டாக இரண்டு டன் அரிசி சமைத்து காலை மதியம் இரவு என 72 மணி நேரம் இடைவிடாது 40 ஊழியர்களை வைத்து புளி சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெண்பொங்கல், வெஜிடபிள் சாதம் மற்றும் சுண்டல், நீர்மோர், இனிப்பு பானம் என வழங்கி ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்களுக்கு 15வது ஆண்டு வெற்றிகரமாக எட்டுக்குடி முருகனின் அருளால் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க தலைவர் கே.ராஜேந்திரன், செயலாளர் எஸ்.மூர்த்தி, பொருளாளர் எஸ்.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் உற்சாகத்துடன் முருகன் கோவில் அருகில் திரௌபதி அம்மன் வளாகத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டது.