திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தகைசால் தமிழர் நல்லகண்ணு நினைவேந்தல் உரை, சர்வதேச பெண்கள் தின சொற்பொழிவு, கவியரங்கம், திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

செயலர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்றார் சங்க சிறப்புத் தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார்.சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தொகுத்த திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூலினைபத்மஸ்ரீ சுப்புராமன் வெளியிட மெர்சி டயானா, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் இந்திரஜித், பொதுச்செயலாளர் ஜவஹர் ஆறுமுகம் , பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம்,ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, நந்தவனம் சந்திரசேகரன், முகமது ஷபி உட்பட பலர் பெற்றுக் கொண்டனர்.


விழாவில் முனைவர் சாத்தமைப் பிரியா, மேனாள் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ,கவிஞர் கவி செல்வா, கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், கவிஞர் மாறன் மகா, கவிஞர் காயத்ரி, தமிழ் ஆசிரியர் செசிலி , எழுத்தாளர் சித்ரா குபேர சம்பத், எழுத்தாளர் கிரேஸ் பரிமளா, நல்லாசிரியர் மும்தாஜ் பேகம், சிறார் எழுத்தாளர் ஹாசினி, முனைவர் அருணாச்சலம், நன்மாறன், லால்குடி முருகானந்தம், வழக்கறிஞர் சேகர், கண்மணி ராஜா முகமது, கவிஞர் ஆங்கரை பைரவி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக நூலாசிரியர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.
திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெண் எழுத்தாளர்கள் சிறார் எழுத்தாளர்கள் என 40 படைப்பாளர்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *