தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் இயக்குதல் நிதி 2024.2025.மற்றும் 2025.2026. ஆம் நிதியாண்டில் கம்பம் விவேகானந்தர் மாணவர் இல்லம் அருகில் மற்றும் வடக்கு வட்டம் தங்க விநாயகர் கோவில் தெரு மாரியம்மன் கோவில் தெரு கிராமச்சாவடி தெரு போர்டு ஸ்கூல் அருகில் சங்கரலிங்கம் பிள்ளை தெரு என்று கம்பம் நகரில் ஆறு இடங்களில் தலா ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
உடன் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ் நகர் மன்ற கவுன்சிலர்கள் சுந்தரி வீரபாண்டியன் ராஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.