தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செய்தியாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியது விவரம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் ஏப்ரல் 23 4 2026 வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் தொடர்பான நன்னடத்தை விதிமுறைகள் 15 3 2026 ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரிவர பின்பற்றி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் நேர்மையான அமைதியான சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் குறிப்பாக அனைத்துக் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்திட உரிய அனுமதி பெற வேண்டும் எனவே அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 சிறப்பான முறையில் நடத்திட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *