கடலூர், மாவட்டம்
வடலூர் அருகே உள்ள கருங்குழிகிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜா துரோபதிஅம்மன்ஆலயத்தின் ,தீமிதி திருவிழாநேற்று ,(மே மாதம் 1ஆம் தேதி) வெள்ளி கிழமை நடைபெற்றது,

இதன் தொடக்கமாக ஏப்ரல்13ந்தேதி மாலை கோட்டகம் கிராமத்தில் இருந்து அய்யனார் ஆலயம் அருகில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கோவிலுக்கு விழா கொடியேற்றி,காப்பு கட்டப்பட்டது, இதனை தொடர்ந்து தினசரி பாரதகதை உபன்யாசம் (சொற்பொழிவு) 18 நாள் நடைபெற்றது,

இதன் முதல் நாள் (ஏப்.14 ந்தேதி) ஜனனமே ஜெயன் சர்ப்ப யாகம் நிகழ்ச்சியும், இரண்டாம் நாள் சந்திரன் யயாதி ராஜன் பிறப்பும், மூன்றாம் நாள் சந்தனு மகாராஜன் கல்யாணம், நான்காம் நாள் துவாரா கையில், கிருஷ்ணன் பிறப்பும், ஐந்தாம் நாள் திருதராட்டிரன்,பாண்டு, விதூன் ராஜாக்கள் பிறப்பும், ஆறாம் நாள் தர்மபுத்திரர் பிறப்பும், ஏழாம்நாள் பாண்டவர்கள் பள்ளிக்கூடம்,எட்டாம் நாள் பாஞ்சாலி தேவியார் பிறப்பும், ஒன்பதாம் நாள் பகாசூரன்யுத்தம், 10ம் நாள் தர்மராஜன் பாதி ராஜ்ஜியம், பட்டாபிஷேகம், 11ம் நாள்பாஞ்சாலி தேவியார் திருக்கல்யாணம், 12ம் நாள் தீர்த்த யாத்திரையும் அரவான் பிறப்பும், 13 ஆம் ராஜ சுய யாகம், 14ம் நாள் ராஜசுய யாகம் தொடர்ச்சி,பதினைந்தாம் நாள் ஸ்ரீகிருஷ்ணர், துரோபதி தேவியாருக்கு துகில் அளித்து காத்தல்,16-ஆம் நாள் (ஏப் 29ந்தேதி) அர்ஜுனன் தபசு , வனம், பதினேழாம் நாள் (ஏப் 30ந் தேதி வியாழக்கிழமை) காலை மகாஅபிஷேக ஆராதனையும், பூங்கரக அலங்கார சிறப்பு வழிபாடும்,இரவு தருமராசா, துரோபதை அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது, 18-ம் நாள் கிருஷ்ணன் தூதும், காலை 11 மணிக்கு அரவான் களபுலியும், மாலை 3 க்குமணி பாஞ்சாலி தேவியார் கூந்தல் முடிதல், தொடர்ந்து, மாலை ஆறு மணிக்கு தீமிதி வழிபாட்டு விழாவும் நடைபெற்றது,


ஆயிரக்கணக்கானவும் காப்பு அணிந்து தீயில் இறங்கி நேர்த்திக் கடந்து செலுத்தினார்கள், இதனை காண சுற்றுப்புற கிராம மக்களும், வெளியூரில் இருந்து குலதெய்வ பக்தர்களும் பல ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர்,மறுநாள் 19ம் நாள் (சனிகிழமை, )மஞ்சள் நீராட்டு விழாவும்,பாஞ்சாலி தேவியார் வீதி உலாவும் நடைபெறுகிறது, 20ம் நாள் ஞாயிற்றுகிழமை, தர்மர் பட்டாபிஷேகம் இரவு 7 மணிக்குநடைபெறுகிறது,


நிகழ்ச்சி ஏற்பாடுகளை குலதெய்வபக்தர்களும், கருங்குழிகிராமமக்களும் செய்திருந்தனர்.தீமிதி திருவிழாவை ஒட்டி நெய்வேலி துணைக்காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன மேற்பார்வையில்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *