பெரம்பலூர்  சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருகோயில் சித்திரை மாதம் பௌர்ணமியை யொட்டி மாலை 6 மணிக்கு மகா தீபம் , மற்றும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைப்பெற்றது..

விழாவையொட்டி நேற்று அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .
சித்திரை மாதம் வரும் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருகோயில் இத்திரு கோயிலில் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர்,திருமஞ்சனம், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து அருள்மிகு முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து அம்மனை பெண்கள்,மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். சித்திரை மாதம் 18-ம் தேதி வரும் பௌர்ணமியையொட்டி உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானம் ஏற்பாட்டினை சங்குபேட்டை அன்னதான குழுவினர் செய்திருந்தனர் .

மாதம் தோறும் வரும் அம்மாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் தொடர்ந்து 2ம் ஆண்டு அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சியினை சங்குபேட்டை அன்னதான குழுவினர் முன்னின்று நடத்தி வருகிறார்கள் . விழாவில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகி கண்ணபிரான், முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *