கம்பம் நகரில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு திரட்டிய மாவட்ட மாணவரணி அமைப்பாளர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக அண்ணா திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது

இந்த நிலையில் தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் டி கே ஜக்கையன் அவர்களின் மகனும் தேனி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளருமான கே ஜெ பால மணி மார்பன் கம்பம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அண்ணா திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் வீட்டிற்கு நேரில் சென்று அண்ணா திமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்

இதன்படி கம்பம் அண்ணா திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும் ஆர்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மேனேஜிங் டைரக்டருமான ஆர் ஆர் ராஜாங்கம் அவர்களை நேரில் சந்தித்த மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கே ஜெ. பாலமணி மார்பன் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்

உடன் கம்பம் நகர செயலாளர்கள் எம் ஆர் கார்த்திகேயன் கணபதி முன்னாள் அண்ணா திமுக நகர செயலாளர் ஆர்.ஆர். ஜெகதீஷ் உள்பட அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *