தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

அதிகாலையில் ஊர்மாறிச் சென்ற தனியார் பஸ் குடிபோதையில் ஓட்டுநர் துணிகரம் பயணிகள் அலறல்.

தாராபுரம் பஸ் ஸ்டேண்டில் தனியார் பஸ் டிரைவர் குடிபோதையில் வேறு ஊர் நோக்கி டிரிப் அடித்தார். சரக்கு வாகனத்தின் மீது மோதி விட்டு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டுதடுத்த போலீசார் விசாரனைக்கு பின் டிரைவர் இறங்கி ஓடிவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து தனியார் பஸ் தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்து இரவு ஹால்ட் ஆனது.நேற்று காலை 6:30 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு கரூர் சென்றடைய வேண்டும். நேற்று காலையில் தாராபுரம் பஸ் ஸ்டைண்டில் 6:00 மணிக்கு பஸ்ஸில்  புறப்பட்டனர். பஸ் கண்டக்டர் கரூரைச் சேர்ந்த லோகேஸ்வரன் வயது 38 ட்ரிப் எடுக்க இன்னும் டைம் இருக்கிறது என்று அருகில் உள்ள டீ கடைக்குச் சென்றார்.பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் மூலனூர்,கரூர் உள்பட பல பகுதிக்கு செல்ல

பஸ்ஸின் டிரைவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளபட்டி தாதாகம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ஆனந்த வயது 38 என்பவர் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து பஸ்ஸைஸ்டார்ட் செய்தார்.பஸ் புறப்பட்டு வெளியே வந்தது.

கண்டக்டர் வழியில் ஏறி கொள்வார் போல் என்று பயணிகளும் விட்டுவிட்டனர். பஸ் தாராபுரம் பைவ் கார்னர் பழனி ரோடு செல்லும் பொழுது வேகம் பிடித்தது. ஆனால்.பழனி ரோடு கொளிஞ்சிவாடி பழைய அமராவதி பாலம் வழியாக திரும்பி கரூர் செல்வதற்கு பதிலாக பஸ் ஒட்டன்சத்திரம் ரோட்டில் திரும்பியது. ஏதோ பிரச்சனை காரணமாக பஸ் ரூட்டை மாற்றி விட்டிருப்பார்கள் போல் உள்ளது என்று பயணிகளும் சரியாக கவனிக்கவில்லை.

பஸ் ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் செல்லும்போது வேகம் அதிகரித்தது.ஏதோ தவறு நடக்குது என்று விசாரிக்க ஒரு பயணி டிரைவரிடம்  சென்றுபார்த்த போது மது வாடை அதிகமாக வீசியது. உடனே பயணிகள் சத்தம் போட, கவனம் திரும்பிய டிரைவர் சைடு எடுக்கும் பொழுது வேறு ஒரு சரக்கு வாகனத்தின் மீது மோதி பின்பக்க கண்ணாடி உடைந்தது.

ஒரு வழியாக பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு பஸ்சை தாராபுரம் கோனாரிபட்டிபிரிவு தனியார் மோட்டல் அருகே சென்றபோது பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பயணிகள் இறங்கியதை கண்டதும் ஸ்லோ செய்த டிரைவர் வண்டியை வேகம் எடுத்து யுடேன்போட்டு பஸ்ஸை தாராபுரம் நோக்கி ஒட்டிவந்தார்.தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை காணவில்லை என்று டிரைவரையும் காணவில்லை என்று  தாராபுரம் போலீசுக்கு கண்டக்டர் லோகேஸ்வரன் தகவல் அளித்தார்.
இத்தகவல் ஹைவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

ரோந்து பணியில் இருந்த ஹைவே போலீசார் தாராபுரம்பழனிரோடு தனியார் கல்லூரி ரவுண்டானா அருகே வேகமாக வந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தினார்கள்.தனியார் பஸ்ஸல ஓரங்கட்டி நிறுத்தினார்கள். டிரைவரிடம் விசாரணை செய்யப்பட்டது. டிரலவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக தாராபுரம்  போலீசாருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைத்தனர். குடிபோதையை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தபோது பஸ்ஸின் டிரைவர் ஆனந்த் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக விசாரணை மேற்கொண்டு இருந்தபோதை டிரைவர் நைசாக இறங்கி ஓடிவிட்டார். சட்டம் ஒழுங்கு போலீசார் பஸ்சை கைப்பற்றி தாராபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். டிரைவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பின்னர் ஒரு மரத்தடியில் தூங்கிய டிரைவரை ஒரு மணிநேரம் கழித்து போலீசார் கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர் போதையில்அதிகாலையில் நடந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *