செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி வார்டு 29 ல் மண்டல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாள் மற்றும் வட்டாட்சியர் ஜோதிமணி ஆகியோரது முன்னிலையில் ,
நமது வாக்கு நமது உரிமை என்ற தலைப்பில், அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வார்டு முழுவதும் உள்ள தெருக்களில் மேளதாளத்துடன் பொதுமக்களுக்கு வாக்குரிமை அவசியம் பற்றியும் எடுத்துரைத்து வாக்குகளை வீணடிக்காதீர் எனவும் தேர்தல் நாள் அன்று அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று உங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக அரசு அதிகாரிகள் பேண்ட் வாத்தியங்களுடன் தெருவில் சென்று வாக்களிக்கும் அவசியம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.