குறிஞ்சிப்பாடி வட்டம்
வடலூர், பிரைடு லயன்ஸ் கிளப் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை தலைவர் லயன், தமிழரசன் தலைமை தாங்கினார். பொருளாளர்
பெஸ்ட் ஸ்டிக்கர்சிவலிங்கம்முன்னிலை வகித்தார்
முகாமை முன்னாள் ஆளுநர் ராஜன் மற்றும் தொழிலதிபர் கே.எஸ்.ஆர்.பாலு, மித்ரா மருத்துவமனை, டாக்டர் பிரியதர்ஷன், எஸ்டி ஈடன் பள்ளிகள் நிர்வாகஇயக்குனர் தீபக்தாமஸ், ஆனந்த, செல்வகுமார், டாக்டர் ஆனந்தலட்சுமி தலைமையிலான அப்போலோ மருத்துவமனை குழுவினர்கள் கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்தனர்.
இதில் அரிமா சங்க உறுப்பினர்கள் கலைமணி, பிரேம், ஆனந்த், அஜித், அபிலேஷ், ராஜ்குமார் ராமதாஸ், விஜயகுமார், பிரவீன், கோகுல் கண்ணன் மணிவேல் அனைவரும் கலந்து கொண்டனர். 400 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் முடிவில் செயலாளர் அரிமா கார்த்திக் நன்றி கூறினார்