காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கொண்டமங்கலம் பகுதியில் ரியல் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்.
கல்பாக்கம் மே 27
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி (இ. ஆ. பெ), மாவட்ட சுகாதார பணிகள் மரு.செந்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பேபி மற்றும் பரணி,பபிதா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, ரியல் அறக்கட்டளை நிறுவனர் லாரன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில், நேற்று 26ம் தேதி காட்டாங்குளத்தூர் ஒன்றியம், அணுமந்தபுரம் அடுத்த கொண்டமங்கலம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாலு தலைமையில்,துணை தலைவர் ஆறுமுகம், செயலாளர் வில்சன், நந்திவரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் உமா மகேஸ்வரி,கயல் மற்றும் கற்பக விநாயக மருத்துமனை மருத்துவர்கள் சௌமியா, ஹஸ்வதி,நிஷாருதீன், சுபஷ்,நித்திலன், பிவீன்குமார்,மற்றும் சாமுவேல் ஆராரோ டேவிட்,ஜெயந்தி ரியல் அறக்கட்டளை திட்ட மேலாளர் மணிகண்டன், களப்பணியாளர் மலர்விழி,இந்த முகாமில் கண் பரிசோதனை,தோல் நோய் சிகிக்சை, பொது மருத்துவம்,எச். ஐ. வி,பால்வினை தொற்று,மஞ்சள் காமாலை,கல்லீரல் அழற்சி,முதலான நோய்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.100 க்கும் மேற்பட்ட இலக்கு மக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.