நவம்பர் 14 ந்தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் சாலையில், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக ஓவிய போட்டி மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது..

சாலை பாதுகாப்பு”, “மரங்களை காப்போம்”, “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்” உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற போட்டியில், 3 முதல் 12 வயது வரையிலான 200 க்கும் மேற்பட்ட சிறுவர்,சிறுமிகள் கலந்து கொண்டனர்..

முன்னதாக இதற்கான துவக்க விழாவில் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர்(clinical director) டாக்டர் மிருதுபாஷிணி கோவிந்தராஜன், பொறுப்பு இயக்குநர் அமித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்…

போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் தங்களது படைப்பாற்றல் மற்றும் கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் நவம்பர் 14 ந்தேதி குழந்தைகள் தினத்தில் நடைபெற உள்ள விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக சைக்கிள், இரண்டாம் பரிசாக இசைக்கருவி, மற்றும் மூன்றாம் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்க உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்..

நவம்பர் 14 ந்தேதி குழந்தைகள் சிறப்பு பிரிவு மருத்துவமனை (Children’s Specialty Clinic) விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் துவங்க உள்ளது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *