கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இ.சி. கோவிந்தராசன் அவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை, அகரம் கூட்ரோட்டில் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரவிச்சந்திரன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் முழக்கமிட்டனர்.

இந்த கொண்டாட்டத்தின் மூலம், அதிமுக வேட்பாளர் இ.சி. கோவிந்தராசன் அவர்களை இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *