சாக்ஸ் எம்.ஏ.வி.எம். எம். என்ஜினீயரிங் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் “வாக்காளர் விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் துணை ஆணையர் (மதுரை வடக்கு) மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சாக்ஸ் எம்.ஏ.வி. எம்.எம். கல்லூரியின் தலைவர் பாஸ்கரன், கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் கணேசன். சபையின் செயலாளர் குமாரகுரு, கண்ணன், ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் கே.வி. கே.ஆர். பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லூரியின் முதல்வர் நவநீதகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர்கள் பிரசன்ன வெங்கடேஷ். எமிலி மனோரஞ்சிதம், டீன் சிவசுந்தர ராஜா மற்றும் ரோட்டரி கிளப் திருநகர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடை பெற்றது. இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்ட பேரணி ராஜா முத்தையா மன்றத்தில் இருந்து காந்தி அருங்காட்சியகம் வரை சென்றது.
இந்நிகழ்ச்சியை என். எஸ்.எஸ். திட்ட அலுவலர் விக்னேஷ் பாபு, மற்றும் ரோட்ராக்ட கிளப் சங்க நிர்வாகிகள் சூர்யா, முகமது ரஹிம், அரசப்பர் மற்றும் நிர்வாக மாணவர்கள் இணைந்து நடத்தினர்.