நன்னிலம் மற்றும் குடவாசலில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அவர்களுக்கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு.
நன்னிலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ அறிவிக்கப் பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் மற்றும் குடவாசல் ஆகிய இடங்களில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்த வேட்பாளர் இரா.காமராஜ் எம்எல்ஏவை நிர்வாகிகள் கூட்டணி கட்சிகள் வரவேற்று கைத்தறி ஆடை அணிவித்து ஆதரவை தெரிவித்தனர்.
நன்னிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலாளர் கோபால் தலைமையில் ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன் ராம குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர்.
அதுபோல் குடவாசல் தேர்தல் பணிக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்த வேட்பாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ வை அமைப்புச் செயலாளர் கோபால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குடவாசல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாப்பா சுப்பிரமணியன் குடவாசல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணை செயலாளர் பாப்பா போத்தன் உள்ளிட்டோர் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வுகளில் கூட்டணி கட்சியினரும் கலந்துகொண்டு வேட்பாளருக்கு கைத்தறி ஆடை வழங்கி ஆதரவை தெரிவித்தனர்.