தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் அருகிலுள்ள பேட்டைகாளிபாளையம் பகுதியில் இன்று பரபரப்பான சம்பவம் ஒன்று ஏற்பட்டது. வைக்கோல் ஏற்றி சென்ற ஈச்சர் வண்டி, சாலையோரத்தில் இருந்த உயர் மின்னழுத்த மின்கம்பிகளில் உரசியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக திடீரென தீப்பற்றிய வைக்கோல், கண நேரத்தில் முழுவதும் எரிந்து நாசமானது. தீ வேகமாக பரவியதால்,6 லட்சம் மதிப்பிலான வண்டியும் சேதமடைந்தது சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது பெரிய காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், வண்டி மற்றும் சரக்கு முழுவதும் சேதமடைந்ததால் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பாக குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.