மும்பையில் முதன்முறையாக, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளை ஒரே மேடையில் இணைத்து, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விரிவான ஜனநாயக விவாத மேடை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை மும்பை விழித்தெழு இயக்கம் (MVI) ஒருங்கிணைத்தது.

விவாத தலைப்புகள்

பகுதி 1: மும்பை தமிழர்களின் கோரிக்கைகள்
• மும்பை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
• மத்திய மற்றும் மாநில அரசின் நிர்வாக சவால்கள்
• நாடாளுமன்றத்தில் கோரிக்கைகள் முன்வைப்பது / புறக்கணிப்பு
• கல்வி, தமிழ் பவன், சாதி சான்றிதழ் போன்ற அடிப்படை தேவைகள்

பகுதி 2: அரசியல் மற்றும் தேர்தல் நோக்கு
• திமுக ஆட்சி தொடர வேண்டிய காரணங்கள் மற்றும் சாதனைகள்
• பாஜக மற்றும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் உருவாகும் சிக்கல்கள்
• “பாஜக வெல்லக்கூடாது” என்ற திமுக நிலைப்பாட்டின் பின்னணி
• பாஜக / அதிமுக ஆட்சியில் செயல்திட்டங்கள்
• விசிக (VCK) ஆட்சியில் பங்கு அதிகரித்தால் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள்
• நாம் தமிழர் கட்சியின் ஆட்சித் திட்டங்கள்

மேலும் தேர்தல் வாக்குறுதிகள், இலவச திட்டங்கள், அரசு கடன், சட்ட ஒழுங்கு, கூட்டணி அரசியல், திராவிட & தமிழ் தேசியம், வேங்கைவயல் போன்ற முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.

பங்கேற்பாளர்கள்
• திரு. ஆல்வின் தாஸ் – Bharatiya Janata Party (பாஜக)
• திரு. டி. எஸ். சாலமோன் ராஜா – Viduthalai Chiruthaigal Katchi (விசிக)
• திரு. கி. வீரமணி – Dravida Munnetra Kazhagam (திமுக)
• திரு. ஆ. பி. சுரேஷ் – Naam Tamilar Katchi ஆதரவாளர்

நிகழ்வின் சிறப்பம்சங்கள்
• மும்பையில் இத்தகைய அரசியல் விவாதம் நடைபெறுவது முதல் முயற்சி
• அனைத்து கட்சிகளும் மும்பை தமிழர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என ஒருமித்த கருத்து தெரிவித்தனர்
• தனிப்பட்ட தாக்குதல்கள் இன்றி, ஆரோக்கியமான ஜனநாயக முறையில் விவாதம் நடைபெற்றது

நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஸ்ரீதர் தமிழன்,
மும்பை விழித்தெழு இயக்கம் (MVI)

விவாதம் முழுமையாக பதிவு செய்யப்பட்டு, எடிட்டிங் பணிகள் முடிந்த பின் YouTube-இல் வெளியிடப்படும்.

மும்பையில் இதுபோன்ற அரசியல் மேடை – முதல் முயற்சி
எந்த sponsorship இல்லாமல், TRP / likes க்காக அல்ல
மக்கள் நலனுக்காக மட்டும் நடத்தப்பட்டது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *