தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் இந்திராணி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனிசட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவர் இந்திராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.பி. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோரைக் சந்தித்து இந்திராணி வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின் போது தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.