செய்யூர் அடுத்த இலத்தூர் ஒன்றியம் மேலப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் 64 வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தலைமையாசிரியை திருமதி ஆ. பரமேஸ்வரி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.