துறையூர் சார்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ்நாடு,,பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு 30-03-2026அன்று நடைபெற்றது.இந்த வாக்கு பதிவு காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற்றது. துறையூர் சார்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் நீதியரசர் கே என் பாட்ஷா (ஓய்வு) தலைமையில் 2026 ஆம் ஆண்டின் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது.
துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலை வகித்தார்.துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தேர்தல் நடத்துனர் வழக்கறிஞர் முகமது ரபிக், உதவி தேர்தல் நடத்துனர் வழக்கறிஞர்கள் தனபால், கோகுல், க்யூஆர் மேற்பார்வையாளர் சூர்யா, குலாம் முகமது பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டு வாக்குப்பதிவு நடத்தினர். இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் பதிவு பெற்ற துறையூர் சார்பு நீதிமன்றத்தில் உள்ள 164 வழக்கறிஞர்களில் 159 வழக்கறிஞர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.உப்பிலியபுரம் இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்