தேனி தனியார் ஹோட்டலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டி பட்டியில் உள்ள ஏ.பி.எம்.கிராண்ட் ஹோட்டலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று தேனி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சிகள் பாடுபட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.இந்த கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.