சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 7 வது வார்டு இந்திரா நகர் பேசின் ரோடு, எம்ஜிஆர் சாலை பகுதியில் அனுமதியில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தை வரைந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினரை கண்டவுடன் சின்னம் வரைந்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர் இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில்
தேர்தல் வீதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து படம் வரைந்த நபர்களை தேடியும் அவர்கள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்