தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் ஐரன் டொமினன்ஸ் கிளாசிக் 2026′ பளுதூக்கும் போட்டி.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு அமெச்சூர் பவர் லிப்டிங் சங்கம் நடத்தும் “ஐரன் டொமினன்ஸ் கிளாசிக் 2026” மாநில அளவிலான ஓபன் பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் சாம்பியன்ஷிப்பளுதூக்கும் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் 100 பேரும், ஆண்கள் 200 பேரும் பங்கேற்றனர்.

பெண்கள் அதிக அளவில் பங்கேற்றது இந்தப் போட்டியின் சிறப்பம்சமாக இருந்தது. தமிழகத்திலேயே பெண்கள் அதிகமாக பங்கேற்ற பவர் லிப்டிங் போட்டி தாராபுரத்தில்தான் நடைபெற்றுள்ளது என போட்டி ஒருங்கிணைப்பாளர் கர்வேந்தன் தெரிவித்தார்.

போட்டியில் பெண்கள் பல்வேறு பிரிவுகளில் அதிகளவில் பரிசுகளை வென்றனர். மொத்த சாம்பியனாக (Overall Strongwoman) கலைவாணி
தேர்வு செய்யப்பட்டார். ஆண்கள் பிரிவில் மொத்த சாம்பியன்களாக (Overall Strongman) துளசி ராமன் மற்றும் திவ்யபிரகாஷ் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தப் போட்டியை பவர் லிப்டிங் சங்க செயலாளர் கர்வேந்தன் ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினர்களாக சி.ஆர். ராஜேந்திரன், பங்க் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகள் வழங்கினர்.

அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகம் அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *