கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக
பொது மக்களுக்கு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர்களையும் சனாதனத்தை அழிப்பேன் என்று கூறியவர்களையும் சார்ந்த கட்சிகளை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத இந்து விரோத ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அந்த துண்டு பிரசுரங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று இந்து முன்னணி சார்பாக இந்த மக்கள் தொடர்பு நடைபெறுகிறது.
கோவை மாநகர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் பங்கேற்று 5000 வீடுகளுக்கு மேலாக நோட்டீசுகளை வழங்கினர்.
இதில் கண்ணப்ப நகர் ரத்தினபுரி பகுதியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் உக்கடம் பகுதியில் கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன் கணபதி பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் கதிர்வேல் காந்திபுரம் பகுதியில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் குனியமுத்தூர் பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் செல்வபுரம் பகுதியில் இந்து ஆட்டோ முன்னணி மாவட்டத் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
.