துறையூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக லெனின் பிரசாத் அறிவிப்பு-காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
துறையூர் ஏப்-05
திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக எம்.லெனின் பிரசாத் என்பவரை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக தேசிய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ள எம்.லெனின் பிரசாத் என்பவரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலுடன் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து கலைஞர் சிலை முன்புறம் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் காங்கிரஸ் கமிட்டியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதில் மாவட்ட துணை பொருளாளர் டிவி கண்ணன், வடக்கு வட்டாரத் தலைவர் அரவிந்தன், தெற்கு வட்டார தலைவர் பிரீஸ் சரவணன், சிறுபான்மை பிரிவு நகர தலைவர் முகமது பஷீர், மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கலியபெருமாள், புரப்பஸர் பன்னீர் செல்வம், கலிய மூர்த்தி,மணி, கே எஸ் ராஜு நாகராஜ், ஊடகப்பிரிவு மனோஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்