தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதிக்கு திமுக வேட்பாளர் மருத்துவர் இந்திராணி அவர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குண்டடம் அருகே உப்பாறு அணை அருகே இன்று திமுக வேட்பாளர் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உப்பாறு அணை அருகே திமுக கட்சி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தலைவர் அர்ஜுனன். கந்தசாமி.மற்றும் வேலுச்சாமி. திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியதாவது தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து போதிய நீர் வழங்கப்படாததால் உப்பாறு விவசாயிகள்க்கு கடந்த 30 வருடமாக ஒவ்வொரு வருடமும் தண்ணீரை போராடி பெற வேண்டியதாக உள்ளது.

உப்பாறு அணையில் இருந்து ஒரு ஆண்டுக்கு விவசாயத்துக்கான குடிநீர் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீரை அணைக்கு தர வேண்டு மென கோரிக்கை இம்மணுவில் கேட்டுக்கொண்டனர். வருட தூரம் வருகின்ற தண்ணீர் விவசாயத்திற்கும். பொதுமக்கள் குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி விவசாயிகளிடம் கூறியதாவது வருகின்ற காலங்களில் உப்பாறு அணை நிச்சயம் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *